தொழு நோய் விழிப்புணர்வு ஊர்வலம்


தொழு நோய் விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 9 Feb 2023 12:18 AM IST (Updated: 9 Feb 2023 11:34 AM IST)
t-max-icont-min-icon

வாலாஜாவில் தொழு நோய் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கல்லூரி சார்பில் தொழு நோயை வென்று சரித்திரமாக்குவோம் என்ற கருத்தை முன்வைத்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சீனிவாசன் தலைமை தாங்கினார. சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பிரீத்தா கலந்துகொண்டு பேசினார். அப்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் 10 ஆயிரம்பேரில் 200 பேர் தொழுநோய் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர். அரசின் முயற்சியால் கூட்டு மருத்துவசிகிச்சை பலனாக 30 ஆயிரம் பேருக்கு ஒருவர் என்ற நிலைக்கு மாறி உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் தற்போது 58 நபர்கள் மட்டுமே தொழு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்றார்.

தொடர்ந்து மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை பேரணியை சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற சுகாதார பணிகள் துணை இயக்குனர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் கல்லூரி வளாகத்தில் தொடங்கி வாலாஜா பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது. இதில் கல்லூரி பேராசிரியைகள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.


Next Story