எம்.ஜி.ஆர். பிறந்தநாளில் அவரை போற்றிவணங்குவோம் - மத்திய இணை மந்திரி எல்.முருகன்


எம்.ஜி.ஆர். பிறந்தநாளில் அவரை போற்றிவணங்குவோம் - மத்திய இணை மந்திரி எல்.முருகன்
x

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர், பாரத ரத்னா, டாக்டர் எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

சென்னை,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர், பாரத ரத்னா, டாக்டர் எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்த நாளை முன்னிட்டு மத்திய இணை மந்திரி எல்.முருகன் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

"இவர்போல யாரென்று ஊர் சொல்ல வாழ்ந்த பொன்மனச் செம்மல், எம்.ஜி.ஆர்." தான் நடித்த திரைப்படங்கள் வாயிலாக, சமுதாயத்திற்குத் தேவையான கருத்துகளை அழுத்தமாக முன்வைத்தவர். ஆறு முதல் அறுபது வயதான அத்தனை மக்களின் அன்புக்கும் பாத்தியப்பட்டவர்.

"வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்" என்ற அவரது பாடல்போல இன்னும் மக்கள் மனதில் ஆழமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் தலைவர். எளிய மக்கள் அனைவராலும் "புரட்சித் தலைவர்" என்று அன்போடு அழைக்கப்பட்டவர், அரசியலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, மக்கள் நலனுக்காக பணி செய்தவர்.

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர், பாரத ரத்னா, டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களின் பிறந்தநாளான இன்று, அவரைப் போற்றி வணங்குவோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story