போதைப்பொருட்களை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைேவாம்
போதைப்பொருட்களை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைேவாம் என தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பேசினார்.
விருதுநகர்
ராஜபாளையம்,
ராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். துணை போலீஸ் சூப்பிரண்டு ப்ரித்தி, முன்னிலையில் மாணவ-மாணவிகள் போதைப்பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி எடுத்தனர். அதனைத்தொடர்ந்து தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கும் சைக்கிளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- போதை பொருட்களை ஒழிப்பதற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர முயற்சியை எடுத்து வருகிறார். போதைப்பொருட்களை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைேவாம்.இவ்வாறு அவர் கூறினார். இதில் பள்ளி செயலாளர் விஜயராசன், உறவின்முறை தலைவர் ஆதவன், தலைமை ஆசிரியர் வெங்கடேசன், நகர செயலர்கள் ராமமூர்த்தி, மணிகண்ட ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story