போதைப் பொருட்கள் ஒழிப்பில் அனைவரும் கைக்கோத்திடுவோம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்


போதைப் பொருட்கள் ஒழிப்பில் அனைவரும் கைக்கோத்திடுவோம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்
x

போதைப் பொருட்கள் ஒழிப்பில் அனைவரும் கைக்கோத்திடுவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

சென்னை,

சென்னை பெருநகர காவல்துறை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு குறும்படம் ஒன்றை பகிர்ந்துள்ளது. அந்த டுவீட்டை குறிப்பிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், போதைப் பொருட்கள் ஒழிப்பில் அனைவரும் கைக்கோத்திடுவோம் என்று பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "போதைப்பொருட்கள் ஒழிப்பில் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுடன் விழிப்புணர்வுக்கான பரப்புரைகளைச் செய்திட வேண்டுமெனத் தொடர்ந்து கூறிவருகிறேன்.

இத்தகைய குறும்படங்களால் இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட முடியும். பாராட்டுகள்! போதைப் பொருட்கள் ஒழிப்பில் அனைவரும் கைக்கோத்திடுவோம்!" என்று கூறியுள்ளார்.


Next Story