"ராகுலுக்கு எதிரான தீர்ப்பு சொன்ன நீதிபதி நாக்கை அறுப்போம்"-காங்கிரஸ் நிர்வாகியின் பேச்சால் பரபரப்பு


ராகுலுக்கு எதிரான தீர்ப்பு சொன்ன நீதிபதி நாக்கை அறுப்போம்-காங்கிரஸ் நிர்வாகியின் பேச்சால் பரபரப்பு
x

ராகுலுக்கு எதிரான தீர்ப்பு சொன்ன நீதிபதி நாக்கை அறுப்போம் என்று காங்கிரஸ் நிர்வாகியின் பேச்சால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்,

பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். ராகுல் காந்தியை பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து காங்கிரஸ் போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் சார்பிலும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடந்து வருகிறது.

இந்த நிலையில், ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, மற்றும் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கம் மாநகர் மாவட்ட எஸ்சி எஸ்டி பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகி பேசுகையில்,

மக்கள் அமைதியாக இருக்கின்றார்கள் என நினைக்கிர்களா? மக்கள் அனைவரும் உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கிறார்கள். ராகுல் காந்தியை சிறை தண்டனைக்கு அனுப்ப வேண்டும் என நினைக்கின்ற பாஜக அரசை நாட்டை விட்டு வெளியேற்றுவோம். காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் ராகுல்காந்திக்கு எதிராக தீர்ப்பு கூறிய நீதிபதியின் நாக்கை அறுப்போம் என காங்கிரஸ் கட்சியின் திண்டுக்கல் மாநகர மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story