இன்னும் 3 நாட்களில் கொள்ளையர்களை நெருங்கிவிடுவோம்: வடக்கு மண்டல ஐஜி
ஒரே கும்பல்தான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது. பல்வேறு தடயங்கள் கிடைத்திருப்பதால் கொள்ளையர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என்று வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்தார்.
திருவண்னாமலை,
திருவண்ணாமலையில் 4 ஏ.டி.எம்களில் அடுத்தடுத்து மொத்தமாக ரூ. 75 லட்சம் கொள்ளையடிக்கப்படது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து 9 தனிப்படைகள் அமைத்துள்ள போலீசார், கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த நிலையில், வடக்கு மண்டல ஐஜி கண்ணன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சில துப்புகள் கிடைத்திருக்கின்றன.
விரைவில் கொள்ளையர்கள் பிடிபடுவார்கள். அறிவியல் ரீதியான முறைகளை பயன்படுத்தி வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இன்னும் 3 நாட்களில் கொள்ளையர்களை நெருங்கிவிடுவோம். ஒரே கும்பல்தான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது. பல்வேறு தடயங்கள் கிடைத்திருப்பதால் கொள்ளையர்கள் விரைவில் பிடிபடுவார்கள்" என்றார்.
Related Tags :
Next Story