விடுதலை சிறுத்தைகள் கட்சி மத்திய மாவட்ட செயற்குழு கூட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சி மத்திய மாவட்ட செயற்குழு கூட்டம்
x

ராணிப்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மத்திய மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை முத்துக்கடையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ராணிப்பேட்டை மத்திய மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. ராணிப்பேட்டை மத்திய மாவட்ட செயலாளரும் ராணிப்பேட்டை நகரமன்ற துணைத் தலைவருமான சீ.ம.ரமேஷ்கர்ணா தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், மாவட்டம் முழுவதும் புதிய உறுப்பினர்களை சேர்த்தல், பூத் கமிட்டிகளை அமைத்தல், கிளைகள் தோறும் புதிய கொடிக்கம்பங்களை நிறுவி கொடியேற்றுதல், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்த நாளை ஒட்டி ராணிப்பேட்டை மத்திய மாவட்டத்தின் சார்பில் அனைத்து நகரம் மற்றும் ஒன்றியங்களிலும் அன்னதானம், ரத்த தானம், மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் ஆகியவை அனைத்து கிளைகளும் வழங்குவது, நாங்குநேரியில் பள்ளி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் சக மாணவரை சாதிவெறியோடு வெட்டிய சம்பவத்தை கண்டிப்பதோடு, குற்றத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் உரிய தண்டனை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மண்டல செயலாளர் சித்தார்த்தன், மண்டல துணை செயலாளர் தமிழ், முன்னாள் மாவட்ட செயலாளர் குண்டா சார்லஸ், முன்னாள் மண்டல செயலாளர் ரத்தின நற்குமரன் மாவட்ட செய்தி தொடர்பாளர்கள் சசிகுமார், ராணிப்பேட்டை தொகுதி செயலாளர் ராஜா, ராணிப்பேட்டை நகர செயலாளர் ராஜசேகர், நகரமன்ற உறுப்பினர் நரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story