விடுதலை சிறுத்தைகள் கட்சி செயற்குழு கூட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சி செயற்குழு கூட்டம்
x
தினத்தந்தி 27 Aug 2023 12:15 AM IST (Updated: 27 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செயற்குழு கூட்டம் ஏ.கே.டி. கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் கலையழகன், தொகுதி செயலாளர் அம்பிகாபதி, பாராளுமன்ற தொகுதி துணை செயலாளர் தொல்.தமிழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பச்சையாப்பிள்ளை வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மண்டல செயலாளர் ராஜ்குமார், மண்டல துணை செயலாளர்கள் பொன்னிவளவன், முருகையன் ஆகியோர் கலந்து கொண்டு வருகிற பாராளுமன்ற தொகுதி தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினா். கூட்டத்தில் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டத்திற்கு வருகிற 10-ந் தேதி கட்சி நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வருகை தரும் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.க்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, திருச்சியில் அக்டோபர் மாதம் நடைபெறும் வெல்லும் ஜனநாயகம் மாநாட்டிற்கு கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டத்திலிருந்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் மாவட்ட செய்தி தொடர்பாளர் அனிச்சமலரவன், ஒன்றிய செயலாளர்கள் அலெக்சாண்டர், கனகசபை, சக்திவேல், குபேந்திரன், நகர செயலாளர்கள் இடிமுரசு, சீனு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் தமிழழகன், நகர துணை செயலாளர்கள் இனியன், திருவிக்ரம், ஒன்றிய துணை செயலாளர் மாதேஸ்வளவன், இளஞ்சிறுத்தை எழுச்சிபாசறை துணை அமைப்பாளர் கதிர்வேல்மணி உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story