விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
x

வந்தவாசியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நகர செயலாளர் இனியவன் தலைமையில் நடைபெற்றது.

நகர துணை செயலாளர்கள் இருதயராஜ், ஜபருல்லா, மாவட்ட பொறுப்பாளர்கள் பாலாஜி, சவுந்தரராஜன், வெங்கடேசன், செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர்கள் எழுச்சி பாசறை தொகுதி அமைப்பாளர் இரா.அன்பரசு வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக மாவட்ட செயலாளர் அசுரவடிவேல், மாவட்ட துணை செயலாளர் கோ. சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசினர்.

கூட்டத்தில் நகரில் அனைத்து வார்டுகளிலும் கிளை அமைத்து நிர்வாகிகள் தேர்ந்தெடுத்தல், 24 வார்டு பூத்துகளுக்கும் தேர்தல் பணிக்குழு நியமித்தல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மீரான்பிரதீப், கீர்த்திவாசன், சதீஷ்குமார், வேலா, ஜெயராஜ், கணேசன், ஏழுமலை, யுவராஜா, அரசு, மதன், ஆனந்த், சரத்குமார், சுனில், தினேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சென்னாவரம் பஞ்சாயத்தை சேர்ந்த கார்த்தி தலைமையில் 10 பேர் மாவட்ட செயலாளர் அசுரவடிவேலுக்கு சால்வை அணிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.


Next Story