விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டம்
x

திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டினத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

காயல்பட்டினத்தில் 5-ந்தேதி (திங்கட்கிழமை) விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவனுக்கு காயல் சமூக நீதி பேரவை சார்பில் கண்ணியத் தமிழர் காயிதே மில்லத் விருது வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டணம் பிரசாத் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட அலுவலகத்தில் சிறப்பு செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், திருமாவளவனுக்கு கண்ணியத் தமிழர் காயிதே மில்லத் விருது வழங்கும் காயல் சமூக நீதி பேரவைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. தூத்துக்குடி விமான நிலையத்தில் தலைவர் திருமாவளவனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் தமிழினியன், மாவட்ட பொருளாளர் பாரிவள்ளல், நாடாளுமன்ற தொகுதி செயலாளர் வக்கீல் ராஜ்குமார், துணை செயலாளர் மணிகண்ட ராஜா, சமூக நல்லிணக்கப் பேரவை மாவட்ட அமைப்பாளர் தமிழ்ப்பரிதி, செய்தி தொடர்பு மையம் மாவட்ட அமைப்பாளர் வேம்படி முத்து, இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாவட்ட அமைப்பாளர் விடுதலைச் செழியன், முற்போக்கு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் ரகுவரன், சமூக நல்லிணக்கப் பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் இளந்தளிர் முத்து, ஒன்றிய செயலாளர்கள் சங்கத்தமிழன், தமிழ்வாணன், தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் கருவை சுகுமாறன், நில உரிமை மீட்பு இயக்கம் மாவட்ட அமைப்பாளர் வனவளவன், திருச்செந்தூர் நகர பொருளாளர் சரன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story