விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடலூர்

புவனகிரி,

கடலூர் தெற்கு மாவட்டம் கிள்ளை நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மணிப்பூர் சம்பவவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் கிள்ளை கடைவீதியில் நடந்தது. இதற்கு நகர செயலாளர்விசுவநாதன் தலைமை தாங்கினார். சிதம்பரம் நகர செயலாளர் ஆதிமூலம், ஓய்வு பெற்ற ஆசிரியர் மணிவாசகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி மன்ற கவுன்சிலர் பாரதிவிஸ்வநாதன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் பாலாஅறவாழி கலந்து கொண்டு மணிப்பூரில் இருளர் பெண்களை மான பங்கப்படுத்தியதை கண்டித்து கண்டன உரையாற்றினார். இதில் திராவிடர் கழகத்தின் தலைமை கழக பேச்சாளர் யாழ்திலீபன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.


Next Story