விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர்

சட்ட மேதை அம்பேத்கர் சிலையை அவமதித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தை கைது செய்யக்கோரியும், மயிலாடுதுறை பட்டவர்த்தி கிராமத்தில் தடையை அகற்றக்கோரியும், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சங் பரிவார் அமைப்பை சேர்ந்த குருமூர்த்தியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தியும் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்காவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதேபோல் தா.பழூர் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சட்டமேதை அம்பேத்கருக்கு காவி சின்னம் அணிவித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது.


Next Story