விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாமக்கல்
டாக்டர் அம்பேத்கர் உருவப்படத்துக்கு காவி உடை அணிந்து திருநீறு, குங்குமம் பூசும் செயலை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் பாலு, பொருளாளர் அரசன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜூலி மரியம்மா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தின் போது, அம்பேத்கரை அவமதிக்கும் செயலில் ஈடுபட்டவர்களை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் நகர செயலாளர் வணங்காமுடி, தொகுதி செயலாளர் ஆற்றலரசு, தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் சக்திவேல், தமிழ்புலிகள் கட்சி நகர செயலாளர் உமாமகேஸ்வரன்உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story