தராசு முத்திரை முகாம்


தராசு முத்திரை முகாம்
x

திசையன்விளையில் தராசு முத்திரை முகாம் நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை தொழிலாளர் இணை ஆணையர் ப.சுமதி உத்தரவின் பேரில், உதவி ஆணையாளர் (அமலாக்கம்) நா.முருகப்பிரசன்னா வழிகாட்டுதலின்படி திசையன்விளை இட்டமொழி ரோட்டில் உள்ள எஸ்.ஜே.பி. காம்ப்ளக்ஸ் என்ற முகவரியில் வருகிற 26-ந் தேதி வரை வேலை நாட்களில் தராசு முத்திரை முகாம் நடைபெறுகிறது.

முகாமில் திசையன்விளை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த வணிகர்கள் தங்களது வியாபாரப் பயன்பாட்டில் உள்ள தராசுகள், எடைகள் மற்றும் அளவைகளை மறுபரிசீலனை செய்து முத்திரையிட்டு கொள்ளுமாறும், தராசுகள், எடைகள் மற்றும் அளவைகளுடன் அவற்றின் முந்தைய முத்திரை சான்றிதழை கொண்டு வருமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முகாமில் மறுமுத்திரையிட வரும் வணிகர்கள் இணையவழியில் www.labour.tn.gov.in மூலம் விண்ணப்பங்கள் அளித்திடுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை வள்ளியூர் முத்திரை ஆய்வாளர் சு.அனுராதாபோஸ் தெரிவித்துள்ளார்.


Next Story