காலமுறை ஊதியம் வழங்ககோரி சேலத்தில் நூலகர்கள் உண்ணாவிரதம்
காலமுறை ஊதியம் வழங்ககோரி சேலத்தில் நூலகர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
சேலம்
சேலம் கோட்டை மைதானத்தில் ஊர்ப்புற நூலகர்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று கவனஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. முதன்மை ஒருங்கிணைப்பாளர் சத்தியநாராயணன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறையில் பணியாற்றி கொண்டிருக்கும் அனைத்து ஊர்ப்புற நூலகர்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 15 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் பங்கேற்றனர். அவர்களில் சிலர் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கைகளில் ஏந்தி இருந்தனர்.
Related Tags :
Next Story