மாணவர்களுக்கான நூலக விழிப்புணர்வு நிகழ்ச்சி


மாணவர்களுக்கான நூலக விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

மாணவர்களுக்கான நூலக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

கரூர்

உலக புத்தக தினத்தை முன்னிட்டு நேற்று கரூர் மாவட்ட மைய நூலகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான நூலக விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் நூலக உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மாநகராட்சி கோட்டைமேடு உயர்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியை விஜயா வாழ்த்துரை வழங்கினார். அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 300 பேருக்கு நன்கொடை மூலம் நூலக உறுப்பினர் அட்டை வழங்கி வாசகர் வட்ட தலைவர் சங்கர் சிறப்புரையாற்றினார்.

உலக புத்தக தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் மைய, கிளை மற்றும் ஊர்ப்புற நூலகங்களில் 44-புரவலர்கள், 2-பெரும்புரவலர்கள் மற்றும் 2 -கொடையாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். முன்னதாக மாவட்ட மைய நூலகத்தின் நலநூலகர் சுகன்யா வரவேற்றார். முடிவில் நூலகர் கார்த்தி நிவாஸ் நன்றி கூறினார்.


Next Story