எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்


எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்
x

தேவகோட்ைடயில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சிவகங்கை

தேவகோட்டை,

தேவகோட்டை எல்.ஐ.சி. கிளையின் லியாபி முகவர் சங்கம் மற்றும் அகில இந்திய எல்.ஐ.சி. ஊழியர் சங்கம் இணைந்து பாலிசிதாரரின் போனஸ் தொகையை உயர்த்த வேண்டும் எனவும், எல்.ஐ.சி. பிரீமியத்தில் விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வேண்டும் உள்பட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.ஐ.சி. நிர்வாகத்தை கண்டித்து முகவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.நேற்று முன்தினம் போராட்ட குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் மூத்தமுகவர் காஜாமைதீன், கேசவன் ஆகியோர் தலைமையில் தேவகோட்டை லியாபி சங்க தலைவர் மரியலூயிஸ், செயலாளர் தயாநிதி, பொருளாளர் திருச்செல்வம், அகில இந்திய எல்.ஐ.சி. ஊழியர் சங்க தேவகோட்டை கிளையின் செயலாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் எல்.ஐ.சி.முகவர்களும், எல்.ஐ.சி. ஊழியர் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story