எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்


எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்
x

பாலிசிக்கான போனஸ் தொகையை உயர்த்த கோரி எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நீலகிரி

கூடலூர்,

பாலிசி தொகையில் கமிஷன் குறைத்ததை கண்டித்தும், வாடிக்கையாளரின் பாலிசி கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க கோரியும், வாடிக்கையாளரின் பாலிசிக்கான போனஸ் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் மத்திய அரசை கண்டித்து எல்.ஐ.சி. முகவர்கள் அலுவலகங்கள் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல் நீலகிரி மாவட்டத்தில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூடலூர் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முகவர்கள் சங்க தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். துணை செயலாளர் மோகனன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பாலிசிக்கான ஜி.எஸ். டி. வரியை ரத்து வேண்டும் என கோஷம் எழுப்பி வலியுறுத்தப்பட்டது. கோட்டத் தலைவர் பிரேம்குமார், அமல்ராஜ் உள்பட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். முடிவில் முகம்மது செரிப் நன்றி கூறினார். இதேபோல் ஊட்டி எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முகவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


Next Story