எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்


எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 Oct 2022 12:15 AM IST (Updated: 1 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு நேற்று காலை எல்.ஐ.சி. முகவர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு விழுப்புரம் கிளை தலைவர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். செயலாளர் பாலாஜி, பொருளாளர் ஷேக்கிழார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்ட இணை செயலாளர் சபரிநாதன், கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். பாலிசிக்கான போனசை உயர்த்த வேண்டும், பாலிசி கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும், வெளிநாட்டு பாலிசிதாரருக்கு ஏதுவாக சேவை அளிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் தலைவர் ராஜாரவி, நிர்வாகிகள் ராஜசேகர், அப்பாஸ்மந்திரி, ராஜன்பாபு, பழனிவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் பாபு நன்றி கூறினார்.


Next Story