எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்


எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்
x

திருப்பத்தூரில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்ட எல்.ஐ.சி.மு.கவர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பத்தூர் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் ராஜேஷ் தலைமை வகித்தார். செயலாளர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார். பொருளாளர் வி.சதீஷ்குமார் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தை அகில இந்திய செயற்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்து பேசினார்.

பாலிசிக்கான போனஸ் தொகையை உயர்த்த வேண்டும், பாலிசி கடனுக்கான வட்டி வீதத்தை குறைக்க வேண்டும், பலமுறை ஆவணங்கள் கேட்பதை தவிர்க்க வேண்டும், பாலிசி மற்றும் இதர சேவைக்கான ஜி.எஸ்.டி.யை நீக்க வேண்டும், 5 ஆண்டுகள் காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் டி.எம்.ராஜன் நன்றி கூறினார்.


Next Story