எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்


எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Nov 2022 12:15 AM IST (Updated: 12 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் எல்.ஐ.சி. முகவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் எல்.ஐ.சி. முகவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு எல்.ஐ.சி. முகவர்கள் சங்கத்தின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டு நடவடிக்கை குழு தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் சரவணன், போளூர் செயலாளர் சுரபிராஜன், பொருளாளர் எம்.சுகுணகுமார், ஆரணி கிளை தலைவர் ஜி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை கிளை செயலாளர் சக்திவேல் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக வேலூர் கோட்ட தலைவர் சக்தி கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

இதில் கலந்து கொண்டவர்கள் பாலிசிக்கான போனசை உயர்த்த வேண்டும். பாலிசி கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும். வெளிநாட்டு பாலிசிதாரருக்கு ஏதுவாக சேவை அளிக்கப்பட வேண்டும். அனைத்து வித விண்ணப்ப அளிப்புக்கு ஒப்புகை ரசீது தர வேண்டும். பழைய முறையை பின்பற்றி பாலிசியின் சேவை மீதான ஜி.எஸ்.டி.யை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். நேற்று பகலில் மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் எல்.ஐ.சி. முகவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் ஆரணி பொருளாளர் ராஜமாணிக்கம் நன்றி கூறினார்.


Next Story