கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்
x

கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேலூர்

எல்.ஐ.சி. முகவர்கள் சங்கம் சார்பில் சங்கரன்பாளையம் எல்.ஐ.சி. அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க தலைவர் கல்பனாசுந்தர் தலைமை தாங்கினார். செயலாளர் சண்முகம், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பானுமதி வடிவேல், ஷம்மிகுமார், ராமமூர்த்தி, பிச்சைமணி, ஸ்ரீதர் உள்பட பலர் கோரிக்கைகள் குறித்து பேசினர். முரளிதரன் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் எல்.ஐ.சி. பாலிசிக்கான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும். பாலிசிதாரர்களுக்கு போனஸ் உயர்த்தி வழங்க வேண்டும். எல்.ஐ.சி. முகவர்களின் பணிக்கொடையை உயர்த்தி வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு மற்றும் குழு காப்பீடு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். முகவர் நலநிதி அமைக்க வேண்டும். முகவர்களின் பங்களிப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முகவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருமால் நன்றி கூறினார்.

மேலும், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 11-ந் தேதி முதல் நேற்று வரை 4 நாட்கள் முகவர்கள் வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனர். அதன்படி அவர்கள் புதிய பாலிசிகள் எடுத்தல், பயனிழந்த பாலிசிகள் புதுப்பித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளவில்லை.


Next Story