கொட்டும் மழையில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்
கொட்டும் மழையில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை
எல்.ஐ.சி. முகவர்கள் சங்கம் சார்பில் புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தஞ்சாவூர் கோட்ட தலைவர் செல்வகணேசன் தலைமை தாங்கினார். புதுக்கோட்டை செயலாளர் கருணாநிதி முன்னிலை வகித்தார். பாலிசிதாரர்களுக்கு பாலிசிக்கான போனசை உயர்த்த வேண்டும், பாலிசி கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும், எல்.ஐ.சி. முகவர்களுக்கு பணிக்கொடையை ரூ.20 லட்சமாக உயர்த்த வேண்டும், முகவர் நல நிதி அமைத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது மழை பெய்து கொண்டிருந்தது. மழையையும் பொருட்படுத்தாமல் அவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story