தொழிலாளிக்கு சாகும் வரை சிறை
திருப்பூரில் பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய தொழிலாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.
பள்ளி மாணவி கர்ப்பம்
திருப்பூர் மாவட்டம் அவினாசி முதலிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேஷ் (வயது 46). இவர் திருப்பூரில் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த ஆண்டு 16 வயது பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அந்த மாணவி கர்ப்பமானார். இது குறித்து அறிந்த சிறுமியின் தாயார் அதிர்ச்சி அடைந்தார்.
அவர் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு மகளிர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து முருகேசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தொழிலாளிக்கு சாகும் வரை சிறைதொழிலாளிக்கு சாகும் வரை சிறை
இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.
அதில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முருகேசுக்கு சாகும் வரை சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பாலு தீர்ப்பளித்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஏற்பட்டுள்ள உடல் மற்றும் மனரீதியான பாதிப்புகளுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடாக அரசு வழங்கவும் நீதிபதி பரிந்துரைத்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.