வடமாநில தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை


வடமாநில தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 30 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-31T00:16:58+05:30)

நண்பரை கொலை செய்த வழக்கில், வடமாநில தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து ஓசூர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

கிருஷ்ணகிரி

ஓசூர்

நண்பரை கொலை செய்த வழக்கில், வடமாநில தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து ஓசூர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

வடமாநில தொழிலாளி

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் திகம்பர் பேக் (வயது 39). இவரும் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ராஜ்பகதூர் சிங் (51) என்பவரும் கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள பைரமங்கலம் கிராமத்தில் வாடகைக்கு அறை எடுத்து தங்கினர். நண்பர்களான இவர்கள் 2 பேரும் அந்த பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் தொழிலாளிகளாக வேலை செய்து வந்தனர்.

இந்த நிலையில் 5.7.2021 ஆண்டு நண்பர்கள் இவருக்கும் மது போதையில் தகராறு ஏற்பட்டது. இதில் ராஜ்பகதூர் சிங், தனது நண்பர் திகம்பர் பேக்கை இரும்பு கம்பியால் தாக்கினார். இதில் அவர் சம்பவ இடத்தில் இறந்தார்.

ஆயுள் தண்டனை

இந்த கொலை தொடர்பாக கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்பகதூர் சிங்கை கைது செய்தனர். இந்த வழக்கு ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரோஸ்லின் துரை நேற்று தீர்ப்பு கூறினார்.

அதன்படி குற்றம் சாட்டப்பட்ட ராஜ்பகதூர் சிங்கிற்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.


Next Story