அரசு ஆஸ்பத்திரி மருந்தாளுனரை கொன்ற வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை


அரசு ஆஸ்பத்திரி மருந்தாளுனரை கொன்ற வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 4 Feb 2023 12:15 AM IST (Updated: 4 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அரசு ஆஸ்பத்திரி மருந்தாளுனரை கொன்ற வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை கோர்ட்டு உத்தரவிட்டது.

சிவகங்கை

சிவகங்கை நகர் நேருபஜாரை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 35). இவர் கடந்த 2019-ம் ஆண்டு சிவகங்கையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தற்காலிக மருந்தாளுனராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 10-ந் தேதி ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த தமிழ்செல்வனை சிவகங்கை அடுத்த ஒக்கூர் கிராமத்தை சேர்ந்த அருண்குமார் (26) என்பவர் முன்விரோதம் காரணமாக குத்தி கொலை செய்தார்.

இந்த கொலை தொடர்பாக சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர். அவர் மீது சிவகங்கையில் உள்ள மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் அழகர்சாமி ஆஜரானார். வழக்கை விசாரணை செய்த மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி சாய் பிரியா குற்றம் சாட்டப்பட்ட அருண்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.


Next Story