நிலஅளவையரின் உதவியாளரை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை-சேலம் கோர்ட்டு தீர்ப்பு
நிலஅளவையரின் உதவியாளரை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
உதவியாளர்
சேலம் மாவட்டம் மல்லூரை அடுத்த நிலவாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அய்யனார் (வயது 45). இவர் சேலம் நில அளவையர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2015-ம் ஆண்டு சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அன்னதானப்பட்டி போலீசார் அய்யனாரின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அதில், அவருக் கும், சீலநாயக்கன்பட்டி தலைமலை நகர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (45) என்ற தொழிலாளியின் மனைவிக் கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கொலை
இதனிடையே, கடந்த 25.4.2015 அன்று அய்யனார் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கிருந்த அவரது கணவர் சீனிவாசன் எனது வீட்டிற்கு அடிக்கடி ஏன் வந்து செல்கிறீர்கள்? என அய்யனாரிடம் கேட்டுள் ளார். அப்போது, அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த சீனிவாசன் அங்கிருந்த கட்டையால் அய்யனாரை சரமாரியாக அடித்து தாக்கியதில் அவர் இறந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இந்த கொலை தொடர்பாக அன்னதானப் பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
ஆயுள் தண்டனை
இந்த கொலை வழக்கு விசாரணை சேலம் 2-வது கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இறுதி விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
குற்றம்சாட்டப்பட்ட சீனிவாசனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ரவி தீர்ப்பு கூறினார்.