கன்னியாகுமரியில் புதுப்பொலிவுடன் கலங்கரை விளக்கம்

கன்னியாகுமரியில் புதுப்பொலிவுடன் மாற்றி அமைக்கப்பட்ட கலங்கரை விளக்கத்தை நாளை (வெள்ளிக்கிழமை) முதல் சுற்றுலா பயணிகள்
கன்னியாகுமரியில் புதுப்பொலிவுடன் மாற்றி அமைக்கப்பட்ட கலங்கரை விளக்கத்தை நாளை (வெள்ளிக்கிழமை) முதல் சுற்றுலா பயணிகள் பார்வையிடலாம்.
கலங்கரை விளக்கம்
புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான கன்னியாகுமரி கடற்கரை சாலையில் கலங்கரை விளக்கம் அமைந்துள்ளது. கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த 2019-ம் ஆண்டு முதல் கலங்கரை விளக்கத்தை பார்வையிட அனுமதி அளிக்கவில்லை.
இதற்கிடையே அங்கு ரூ.1.85 கோடியில் பார்வையாளர் மேடை மற்றும் கண்ணாடியிலான லிப்ட் வசதிகள் மேற்கொள்ளும் பணி நடந்தது. இதற்கான பணி முடிவடைந்து புதுப்பொலிவுடன் நாளை (வெள்ளிக்கிழமை) கலங்கரை விளக்கம் திறக்கப்படுகிறது.
சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
அன்றைய தினம் முதல் கலங்கரை விளக்கத்தை சுற்றுலா பயணிகள் பார்வையிடலாம். தினமும் மாலை 3 மணி முதல் 5.30 மணி வரை சுற்றுலா பயணிகள் செல்லலாம். இதுபோக வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் மாலை 3 மணி முதல் 5.30 மணி வரையிலும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
இதில் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.10, சிறியவர்களுக்கு ரூ.5, கேமராவில் படம் எடுக்க ரூ.20, வீடியோ படம் எடுக்க ரூ.25-ம் கட்டணமாக வசூலிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.






