மின்னல் தாக்கி மாடு சாவு; சிறுமிகளுக்கு உடல்நிலை பாதிப்பு


மின்னல் தாக்கி மாடு சாவு; சிறுமிகளுக்கு உடல்நிலை பாதிப்பு
x

மின்னல் தாக்கியதில் மாடு செத்தது.

திருச்சி

துவரங்குறிச்சி:

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த மருங்காபுரி பகுதியில் நேற்று முன்தினம் இரவு பல்வேறு இடங்களில் பரவலாக இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதேபோல் மருங்காபுரி அருகே உள்ள எம்.குளவாய்பட்டியில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் அப்பகுதியை சேர்ந்த அடைக்கலசாமி (வயது 45) என்பவருக்கு சொந்தமான பசுமாடு செத்தது. மேலும் வீட்டிற்கு வெளியே நின்றிருந்த சிறுமிகளான அவரது 2 மகள்களுக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் 2 வீடுகளின் மின் இணைப்பு வயர்கள் தீப்பற்றி எரிந்ததுடன், மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதையடுத்து அப்பகுதியில் மருங்காபுரி வருவாய்த்துறையினர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

1 More update

Next Story