மின்னல் தாக்கி பட்டாசு ஆலை குடோனில் தீ
மின்னல் தாக்கி பட்டாசு ஆலை குடோனில் தீப்பிடித்தது
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கோப்பையைநாயக்கர்பட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு ராக்கெட் உள்ளிட்ட வெடிகள் அங்குள்ள குடோன் ஒன்றில் வைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் நேற்று மாலை திடீரென மழை பெய்தது. மழை பெய்யும் போது மின்னல் தாக்கி பட்டாசு ஆலையில் உள்ள குடோனில் தீப்பிடித்தது. அங்கிருந்த ராக்கெட் வெடிகள் மற்றும் வெடி தயாரிக்க பயன்படும் மருந்து கலவைகள் தீப்பிடித்து வெடித்து சிதறின. அந்த நேரத்தில் குடோனில் தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. தீ விபத்து பற்றி தகவல் அறிந்தவுடன் சிவகாசி தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
Related Tags :
Next Story