கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு தயாரான விளக்குகள்


கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு தயாரான விளக்குகள்
x

திண்டுக்கல் அருகே, கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு விளக்குகள் தயாராக உள்ளன.

திண்டுக்கல்

கார்த்திகை திருநாளையொட்டி பொதுமக்கள் தங்களது வீடுகளில் விளக்குகளால் அலங்கரித்து, தீபம் ஏற்றி வழிபாடு செய்வர். கார்த்திகை திருநாளுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், திண்டுக்கல் மாவட்டம் நொச்சிஓடைப்பட்டியில் விளக்குகள் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. களிமண்ணால் செய்யப்பட்டு, பலவித வண்ணங்களில் விளக்குகள் தயாராகி வருகின்றன. குறிப்பாக அகல்விளக்கு, குபேர விளக்கு, விநாயகர் முக விளக்கு, லட்சுமி விளக்கு, அன்னம், யானைமுகம் மற்றும் பிரதோஷம் மற்றும் அடுக்கு விளக்குகள் விற்பனைக்காக வந்துள்ளன. மேலும் களிமண்ணால் செய்யப்பட்ட ராட்சத குத்துவிளக்குகளும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இவற்றை பொதுமக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.

விளக்குகள் ரூ.2-ல் இருந்து 150 வரை, வேலைபாடுகளுக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கலை தெரகோட்டா உரிமையாளர் கஜேந்திரன் கூறுகையில், கார்த்திகை திருநாளில் பிளாஸ்டிக் பொருட்களில் தீபம் ஏற்றுவதை பொதுமக்கள் விரும்ப மாட்டார்கள். களி மண்ணால் செய்யப்பட்ட விளக்குகளே தீபம் ஏற்ற உகந்தது. மேலும் சுற்றுச்சூழலுக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் நேரில் வந்து விளக்குகளை வாங்கி செல்கின்றனர். கார்த்திகை பண்டிகைக்கு இன்னும் குறைந்த நாட்களே இருப்பதால் விளக்குகள் செய்யும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது என்றார்.


Next Story