காரில் கடத்திய மதுபாட்டில்கள் பறிமுதல்
விழுப்புரம் அருகே காரில் கடத்திய மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி, சப்- இன்ஸ்பெக்டர் சத்யா மற்றும் போலீசார் நேற்று காலை வளவனூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட மாங்குப்பம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை, போலீசார் சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், அந்த காரினுள் 192 மதுபாட்டில்கள், 10 லிட்டர் சாராய பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே காரில் வந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் இருவரும், விழுப்புரம் சிவன்படை தெருவை சேர்ந்த தணிகாசலம் மகன் பச்சையப்பன் (வயது 20), வழுதரெட்டி பகுதியை சேர்ந்த கருணாகரன் மகன் ஹரிஹரன் (20) என்பதும், இவர்கள் இருவரும் புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள், சாராய பாக்கெட்டுகளை கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த மதுபாட்டில்கள், சாராய பாக்கெட்டுகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.