சின்னசேலம் அருகே குண்டர் தடுப்பு சட்டத்தில் சாராய வியாபாரி கைது


சின்னசேலம் அருகே குண்டர் தடுப்பு சட்டத்தில் சாராய வியாபாரி கைது
x
தினத்தந்தி 14 Jun 2023 12:15 AM IST (Updated: 14 Jun 2023 12:31 PM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் அருகே குண்டர் தடுப்பு சட்டத்தில் சாராய வியாபாரி கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கல்லாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 57). சாராய வியாபாரியான இவர் தனது வீட்டின் அருகில் உள்ள வயலில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்தபோது, சின்னசேலம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அப்போது அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயமும் பறிமுதல் செய்யப்பட்டது.

பெரியசாமி தொடர்ந்து சாராயம் விற்பனை செய்து வந்ததால், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் ஷர்வன்குமார், சாராய வியாபாரி பெரியசாமியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து சின்னசேலம் போலீசார், பெரியசாமியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story