தடுப்பு காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது
தடுப்பு காவல் சட்டத்தில் சாராய வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள கொடுக்கன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் குமார்(வயது 39). இவர் மீது செஞ்சி, மேல்மலையனூர் பகுதிகளில் சாராயம் விற்பனை செய்ததாக பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த சில வாரத்திற்கு முன்பு மேல்மலையனூர் ஏரிக்கரையில் சாராயம் விற்பனை செய்த குமாரை, செஞ்சி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இவர் தொடர்ந்து சாராய வழக்குகளில் ஈடுபட்டு வந்ததால் அவருடைய செயல்களை தடுக்கும்வகையில் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் பரிந்துரை செய்தார். இதை ஏற்று கலெக்டர் பழனி உத்தரவின் பேரில் குமாரை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.