தடுப்புக்காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது


தடுப்புக்காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது
x

தடுப்புக்காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது

கள்ளக்குறிச்சி

தடுப்புக்காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது

கள்ளக்குறிச்சி, ஜூன்.10-

கல்வராயன்மலை பகுதி சின்ன திருப்பதியை சேர்ந்த சந்திரன் மகன் வெங்கடேசன்(வயது 29). அதே பகுதியில் உள்ள அடிபெருமாள்கோவில் அருகில் சாராயம் விற்பனை செய்து வந்த இவரை கள்ளக்குறிச்சி மதுவிலக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இருப்பினும் வெங்கடேசன் தொடர்ந்து சாராயம் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்தார். மேலும் இவர் மீது சாராயம் கடத்தல், விற்பனை செய்தல் தொடர்பாக பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரது குற்ற செயலை தடுக்கும் வகையில் அவரை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் பரிந்துரை செய்தார். இதை ஏற்று கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவின் பேரில் வெங்கடேசனை தடுப்புக்காவல் சட்டத்தில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story