சாராயம் விற்ற 6 பேர் கைது


சாராயம் விற்ற 6 பேர் கைது
x

சாராயம் விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டனா்.

கள்ளக்குறிச்சி


சங்கராபுரம்,

சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த செந்தில் (வயது 41) என்பவர், அதே பகுதியில் குன்று மேட்டு அருகில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்து, அவரிடமிருந்து 55 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல் வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்ததாக அரசராம்பட்டு கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (வயது 51) என்பவர், குளத்து மேட்டு அருகில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரையும் போலீசார் கைது செய்து, 60 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் புதுப்பாலப்பட்டில் பூபதி (50), பாச்சேரி கிராமத்தில் சக்தி் (28), சங்கராபுரம் தாமோதரன் (21), ஊராங்காணியில் தண்ணீர் தொட்டி அருகே சாராயம் விற்றதாக வேலு (50) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story