மது விற்றவர் கைது


மது விற்றவர் கைது
x

மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடை அருகே அனுமதி பெறாமல் செயல்படும் மதுபான கூடங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் டாஸ்மாக் கடை பூட்டி இருக்கும் நேரத்தில் உணவகங்கள், பெட்டிக்கடை மற்றும் அனுமதியில்லாமல் செயல்படும் பார்களில் மது பாட்டில்கள் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி விராலிமலை ஒன்றியம் மாத்தூர், ஆவூர், பேராம்பூர் ஆகிய ஊர்களில் உள்ள டாஸ்மாக் கடை அருகே அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட மதுபானக்கூடங்கள் உடனடியாக இழுத்து மூடப்பட்டன. அதனைத் தொடர்ந்து டாஸ்மாக் கடை அருகேயும் உணவகங்கள் மற்றும் பெட்டிக்கடைகளில் மது பாட்டில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு பல்வேறு புகார் வந்தது. அதன்பேரில் மாத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் செவ்வந்தி தலைமையிலான போலீசார் நேற்று அப்பகுதியில் கண்காணித்தனர். அப்போது பேராம்பூர் குளத்துக்கரை அருகே மறைவான இடத்தில் வைத்து கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்த கந்தர்வகோட்டை தாலுகா, மட்டங்காடு கிராமத்தை சேர்ந்த ரெங்கசாமி மகன் அருண்பாண்டியன் (வயது 33) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 9 மது பாட்டில்கள் மற்றும் ரூ.700 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story