மொபட்டில் சாராயம் கடத்தல்


மொபட்டில் சாராயம் கடத்தல்
x

கல்வராயன்மலையில் மொபட்டில் சாராயம் கடத்தல் தப்பி ஓடிய வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்

கல்வராயன்மலையில் இருந்து சாராயம் கடத்தி செல்வதாக கச்சிராயப்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையிலான போலீசார் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள அம்மாபேட்டை கிராமம் தண்ணீர் தொட்டி அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் மூட்டைகளுடன் வந்த வாலிபரை போலீசார் வழிமறித்தனர். உடனே அந்த வாலிபர் மொபட்டுடன் மூட்டைகளை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து போலீசார் அந்த சாக்கு மூட்டைகளை பிரித்து பார்த்தபோது உள்ளே லாரி டியூப்களில் சாராயம் இருந்ததை கண்டுபிடித்தனர். மொத்தம் 60 லிட்டர் சாராயம் இருந்தது. இதையடுத்து சாராயத்தையும், மொபட்டையும் பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வாலிபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story