குடற்புழு நீக்கம் மாத்திரை வினியோகம்
குடற்புழு நீக்கம் மாத்திரை வினியோகம்
அருள்புரம், பிப்.14-
ஒவ்வொரு ஆண்டும் முதல் தவணை பிப்ரவரி -மார்ச் மாதங்களிலும், இரண்டாவது தவணை ஆகஸ்டு-செப்டம்பர் மாதங்களிலும்குடற்புழு நீக்கம் முகாம் நடைபெற்று வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் முதல் தவணையாக குழந்தைகள், பெண்கள் என 9 லட்சத்து 84 ஆயிரம் பேருக்கு குடற்புழு மாத்திரை வழங்கப்படுகிறது. 1-19 வயதுடைய குழந்தைகளுக்கு (ஆண்கள் மற்றும் பெண்கள்) 7 லட்சத்து 80 ஆயிரம் பேரும், 20வயது முதல் 30வயது வரை 2லட்சத்து 4 ஆயிரம் பேரும், கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்கள் என குடற்புழு மாத்திரை வழங்கப்படுகிறது. குடற்புழு தொற்றினால் ஊட்டச்சத்து குறைபாடு.சோர்வு. பசியின்மை.ரத்த சோகை குமட்டல்.வாந்தி ஏற்படும்.குடற்புழு தொற்று தடுக்கும் வகையில் பெண்டசோல் என்கிற குடற்புழு மாத்திரை வழங்கப்படும். .அருகில் உள்ள அங்கன்வாடி மையம் மற்றும் துணை சுகாதார நிலையங்களிலும் பயன் பெறலாம் மற்றும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செவிலியர்கள் நேரில் சென்று வழங்குவார்கள் மேலும் காய்ச்சல், சளி, வயிற்றுபோக்கு போன்றவைகள் இருந்தால் குடற்புழு நீக்கம் மாத்திரை வழங்கப்படாது. அதற்கு பதிலாக 21-ந் தேதி வழங்கப்படும் என்று கணபதிபாளையம் துணை சுகாதார நிலைய ஊழியர்கள் தெரிவித்தனர்.
------------