எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு ஒன்றிய பள்ளி கல்வித்துறை சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, சிக்கலாம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்தது. இதையொட்டி நடந்த பேரணியை கிணத்துக்கடவு வட்டார கல்வி அலுவலர் காளிமுத்து தொடங்கி வைத்தார். பேரணியின்போது 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் எழுத, படிக்க தெரியாதவர்களை அடையாளம் கண்டு, தன்னார்வலர்களை கொண்டு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு கல்வி வழங்குதல், முதலுதவி மற்றும் அடிப்படை சட்டங்கள், ஏ.டி.எம். கார்டு பயன்படுத்துதல் பற்றிய செயல்முறை விளக்கம் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது.இதில் வட்டார வள மைய(பொறுப்பு) ஆசிரியர் பயிற்றுனர் ஹெரன், பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி மற்றும் ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.