குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி


குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 25 Oct 2023 12:45 AM IST (Updated: 25 Oct 2023 12:46 AM IST)
t-max-icont-min-icon

விஜயதசமியை முன்னிட்டு அய்யப்பன் கோவிலில் வித்யாரம்பம் என்று அழைக்கப்படும் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் பங்கேற்றனர்.

கோயம்புத்தூர்
கோவை


விஜயதசமியை முன்னிட்டு அய்யப்பன் கோவிலில் வித்யாரம்பம் என்று அழைக்கப்படும் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் பங்கேற்றனர்.


எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி


விஜயதசமியை முன்னிட்டு அனைத்து அய்யப்பன் கோவில்க ளிலும் வித்யாரம்பம் என்று அழைக்கப்படும் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி நடத்தப்படும். அதாவது குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பு அய்யப்பனை வழிபட்டு அரிசி தட்டில் குழந்தையின் விரலை பிடித்து எழுத வைத்தால் அவர்களுக்கு கல்வியறிவு மேம்படும் என்பது ஐதீகம்.


அதன்படி பெரும்பாலான அய்யப்பன் கோவிலில் எழுத்தறிவித் தல் நிகழ்ச்சி நடந்தது. அதுபோல் கோவை சித்தாபுதூரில் உள்ள அய்யப்பன் கோவிலிலும் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக கோவிலில் காலையில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பெற்றோர் குழந்தைகளுடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


பச்சரிசியில் எழுதினர்


பின்னர் அவர்கள் தங்கள் குழந்தைகளை எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி நடந்த பகுதிக்கு அழைத்துச்சென்றனர். அங்கு குழந்தை களின் கையை பிடித்து பெரிய தட்டில் வைக்கப்பட்டு இருந்த பச்சரிசியில் அ என்று எழுத வைத்து எழுத்தறிவித்தனர்.


அத்துடன் பிள்ளையார் சுழி போட்டதுடன், அம்மா, அப்பா என்றும் எழுத வைத்தனர். மேலும் குழந்தைகளின் நாக்கில் தங்க ஊசியால் எழுதினார். இதையொட்டி அய்யப்பன் கோவிலில் காலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.


ஸ்ரீஹரிமந்திரம்


இது குறித்து இந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் கூறுகையில், விஜய தசமி நாளில் கல்வியை தொடங்கும் வகையில் குழந்தை களின் நாவில் ஸ்ரீஹரி மந்திரத்தையும், உயிரெழுத்தையும் எழுதி, கல்விக் கடவுளை வணங்கி எழுத்தறிவித்தல் செய்யப்படும்.

பள்ளியில் சேர்ப்பதற்கு முன்னதாக எங்கள் குழந்தைகளுக்கு கோவிலில் வைத்து எழுத்தறிவித்தல் செய்தோம். இதன் மூலம் குழந்தைகள் எதிர்காலத்தில் நன்றாக படிப்பார்கள் என்று நம்புகிறோம் என்றனர்.


Next Story