லைவ் அப்டேட்ஸ்: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு...!


லைவ் அப்டேட்ஸ்: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு...!
x
தினத்தந்தி 11 July 2022 1:08 AM GMT (Updated: 11 July 2022 7:56 AM GMT)

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.Live Updates

 • 11 July 2022 7:56 AM GMT • 11 July 2022 7:56 AM GMT • 11 July 2022 7:55 AM GMT • 11 July 2022 7:55 AM GMT • 11 July 2022 7:54 AM GMT • 11 July 2022 7:53 AM GMT • 11 July 2022 4:53 AM GMT

  அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 • 11 July 2022 4:52 AM GMT

  அ.தி.மு.க. பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  பொதுக்குழு தீர்மானத்தை வாசித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வாசித்தார்.

  * அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கான கட்சி சட்ட விதி 20அ- ஐ மாற்றம் செய்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு பதில் கழக பொதுச்செயலாளர் என்று விதி திருத்தம்.அதிமுகவில் இருந்து வந்த கழக ஆலோசனைக்குழு இன்றுமுதல் நீக்கம்.

  * அ.தி.மு.க. பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  * 4 மாதங்களில் அதிமுக பொதுச்செயலாளருக்கான தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றம்.

 • 11 July 2022 4:16 AM GMT

  செயற்குழு கூட்டம் நடைபெற்று முடிந்து தற்போது அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது

 • 11 July 2022 4:13 AM GMT

  அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வை ரத்து செய்து செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்.


Next Story