புஞ்சைபுளியம்பட்டி சந்தையில் ரூ.80 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை
புஞ்சைபுளியம்பட்டி கால்நடை சந்தையில் ரூ.80 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனையானது.
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி கால்நடை சந்தையில் ரூ.80 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனையானது.
கால்நடைகள்
புஞ்சைபுளியம்பட்டி கால்நடை சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறும். ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்ட எல்லையில் உள்ள இந்த சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை விற்பதற்காகவும், விலை பேசி பிடித்து செல்வதற்காகவும் வந்து செல்வார்கள்.
அதன்படி நேற்று கூடிய சந்தைக்கு எருமைகள், கலப்பின மாடுகள், கன்று குட்டிகள், ஜெர்சி இன மாடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் எருமை மாடு ஒன்று 18 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரையும், கருப்பு வெள்ளை மாடு 24 ஆயிரம் ரூபாய் முதல் 35ஆயிரம் ரூபாய் வரையும், ஜெர்சி இன மாடு 20 ஆயிரம் ரூபாய் முதல் 45ஆயிரம் ரூபாய் வரையும், சிந்து 15 ஆயிரம் ரூபாய் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரையும், நாட்டு மாடு 60 ஆயிரம் ரூபாய் முதல் 72 ஆயிரம் ரூபாய் வரையும், வளர்ப்பு கன்று குட்டிகள், 5 ஆயிரம் ரூபாய் முதல் 14 ஆயிரம் ரூபாய் வரையும் விற்பனையானது.
விற்பனை
அதேபோல் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. 10 கிலோ எடை கொண்ட வெள்ளாடு ஒன்று 7 ஆயிரம் ரூபாய் வரையும், 10 கிலோ வரையுள்ள செம்மறி ஆடுகள் 6 ஆயிரம் ரூபாய் வரையும் விற்பனையானது.
கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்து வந்த வியாபாரிகள் கால்நடைகளை விலை பேசி பிடித்து சென்றனர். சந்தை தொடங்கிய 3 மணி நேரத்தில் கால்நடைகள் ரூ.80 லட்சத்துக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.