அங்கன்வாடி உணவில் பல்லி கிடந்ததால் பரபரப்பு


அங்கன்வாடி உணவில் பல்லி கிடந்ததால் பரபரப்பு
x

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அங்கன்வாடி உணவில் பல்லி கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அத்திகுளம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 16 குழந்தைகள் படித்து வருகின்றனர். நேற்று இந்த அங்கன்வாடி மையத்திற்கு 8 குழந்தைகள் வந்தனர். அவர்களுக்கு கலவை சாதம் மற்றும் பாசிப்பயிர் மதிய உணவாக தயார் செய்யப்பட்டது. அதில் 2 குழந்தைகளுக்கு அவர்களின் தாயார் வந்து, அந்த உணவை கொடுத்து கொண்டு இருந்தனர். அப்போது, பாசிப்பயிரில் பல்லி கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்த குழந்தையின் தாய், அங்கன்வாடி பணியாளர்களுக்கு தகவல் தெரிவித்து விட்டு குழந்தைகளை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனா். அங்கு சிகிச்சை பெற்ற பின்னர் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டனர். யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இ்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 More update

Related Tags :
Next Story