சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்

திருநெல்வேலி

முன்னீர்பள்ளம்:

டாஸ்மாக் குடோன் சுமைதூக்கும் தொழிலாளர் சம்மேளனம் சி.ஐ.டி.யு. சார்பில் நெல்லை அருகே உள்ள முன்னீர்ப்பள்ளம் டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி பேசினார். மாவட்ட சுமை பணி சங்க தலைவர் கந்தசாமி, டாஸ்மாக் ஊழியர் சங்க பொதுச்செயலாளர் சரவணபெருமாள் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

டாஸ்மாக் கூலித்தொழிலாளர்களுக்கு மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான கூலியை அமல்படுத்த வேண்டும். புதிய டாஸ்மாக் குடோன் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.


Next Story