நாகர்கோவிலில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


நாகர்கோவிலில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

நாகர்கோவிலில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கன்னியாகுமரி

நாகா்கோவில்:

நாகர்கோவில் நாகராஜா ரத வீதியில் லாரிகளில் இருந்து பொருட்களை இறக்கும் சுமை தூக்கும் பணியாளர்களுக்கு சம்பந்தப்பட்ட லாரி நிறுவனம் கூலி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக பலமுறை கோரிக்கை வைத்த பின்பும் சம்பந்தப்பட்ட லாரி நிறுவனம் அவர்களுக்கான இறக்கு கூலியை வழங்கவில்லை என தெரிகிறது. எனவே இதை கண்டித்து சுமை பணி தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் சம்பந்தப்பட்ட லாரி நிறுவனத்தை முற்றுகையிட்டு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. பெல்லார்மின், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சிங்காரன், செயலாளர் தங்கமோகன், துணைத்தலைவர் அந்தோணி, சந்திரபோஸ், மரியஸ்டீபன் மற்றும் தொழிலாளர்கள் திரளாக கலந்துகொண்டனர். போராட்டத்தின் போது தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து வடசேரி போலீசார் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. எனினும் தங்களுக்கான இறக்கு கூலியை வழங்கக்கோரி சம்பந்தப்பட்ட லாரி நிறுவனம் முன் தொழிலாளர்கள் அமர்ந்திருந்தனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.


Next Story