விவசாயிகள் பயிர்க்கடன் பெற்று பயனடையலாம்


விவசாயிகள் பயிர்க்கடன் பெற்று பயனடையலாம்
x

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகள் பயிர்க்கடன் பெற்று பயனடையலாம் என்று மண்டல இணைப்பதிவாளர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகள் பயிர்க்கடன் பெற்று பயனடையலாம் என்று மண்டல இணைப்பதிவாளர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.

பயிர்க்கடன்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 5,869 புதிய உறுப்பினர்கள் உள்பட 20,878 உறுப்பினர்களுக்கு ரூ.108.30 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டு உள்ளது. இதேபோல நடப்பு ஆண்டு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வழிகாட்டுதலின்படி இதுவரை 4,530 உறுப்பினர்களுக்கு ரூ.20.11 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டு உள்ளது.

இவற்றில் 972 பேர் புதிய உறுப்பினர்கள் ஆவர். விவசாயி களுக்கு கடன்கள் வழங்குவதற்கு தமிழ்நாடு மாவட்ட தொழில்நுட்ப குழுவினரால் 2012-23-ம் ஆண்டிற்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் சாகுபடியாகும் பல்வேறு பயிர்களுக்கும், கால்நடை மற்றும் மீன் வளர்ப்புக்கும் தேவையான கடன் அளவு, கடன் வழங்கும் காலம், தவணைக்காலம் ஆகியவை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஒரு ஏக்கருக்கு நெற்பயிருக்கு பாசன விவசாயம் எனில் ரூ.26,300-ம், மானாவரி எனில் ரூ.23,400-ம், பருத்தி பயிருக்கு பாசனம் எனில் ரூ.22,050-ம், மானாவரி எனில் ரூ.13,900-மும், மிளகாய் பயிருக்கு பாசனம் எனில் ரூ.27,950-ம், மானாவரி எனில் ரூ.21,800-ம், தென்னைக்கு ரூ.22,000-மும் பயிர்க்கடனாக வழங்கப்படுகிறது. அனைத்து விவசாயிகளும் தங்களது பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை உரிய ஆவணங்களுடன் அணுகி கடன் பெற்று பயனடையலாம்.

புகார் தெரிவிக்கலாம்

மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க்கடன் பெறுவதில் காலதாமதம் ஏற்படின் சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். பரமக்குடி வட்டாரத்தை சேர்ந்தவர்கள் 88703 52220 என்ற எண்ணிலும், போகலூர் வட்டாரம் 75503 43249,, கமுதி வட்டாரம் 77081 85419, கடலாடி வட்டாரம் 94435 76159 , நயினார் கோவில் வட்டாரம் 90951 14291, முதுகுளத்தூர் வட்டாரம் 94872 13528, ராமநாதபுரம் வட்டாரம் 99522 06840, மண்டபம் வட்டாரம் 94430 65821, திருப்புல்லாணி வட்டாரம் 83001 71459, திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தை சேர்ந்தவர்கள் 88386 68780, பரமக்குடி சரக துணை பதிவாளரை 73387 21603, ராமநாதபுரம் சரக துணை பதிவாளரை 73387 21602 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இந்த தகவலை கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முத்துக்குமார் தெரிவித்தார்.


Next Story