சுய உதவிகுழுக்களுக்கு ரூ.6 கோடி கடன் உதவி


சுய உதவிகுழுக்களுக்கு ரூ.6 கோடி கடன் உதவி
x
தினத்தந்தி 25 Aug 2023 6:45 PM GMT (Updated: 25 Aug 2023 6:45 PM GMT)

ராமநாதபுரத்தில் 200 மகளிர் சுய உதவி குழுவினருக்கு வங்கி மூலம் ரூ.6 கோடிக்கான சுழல் நிதி கடனுதவியை கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் 200 மகளிர் சுய உதவி குழுவினருக்கு வங்கி மூலம் ரூ.6 கோடிக்கான சுழல் நிதி கடனுதவியை கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார்.

கடன் உதவி

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கான கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வங்கி முதன்மை மண்டல மேலாளர் நாகையா முன்னிலை வகித்தார். கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி மகளிர் சுய உதவி குழுக்களுக்கான சுழல்நிதி கடன் உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:- மகளிர் மேம்பாட்டிற்காக தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. பெண்களின் பொருளாதார முன்னேற்றம் அந்த குடும்பத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும். அதனடிப்படையில் ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் மகளிருக்கு சுயதொழில் தொடங்குவதற்கு ஏதுவாக தொழிற்பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

தொழிற்பயிற்சி பெற்றவர்களுக்கு வங்கியின் மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது. மற்ற கடன் உதவியை போல மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தேவையான கடன் திட்டங்களை வங்கிகள் வழங்கி வருகின்றன.

ரூ.6 கோடி

கடன் பெறும் மகளிர் குழுவினர் சிறந்த முறையில் பயன்படுத்தி பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண வேண்டும். இவ்வாறு பேசினார். விழாவில் 200 குழுக்களுக்கு 26 வங்கி கிளைகள் மூலம் ரூ.6 கோடி சுழல்நிதி கடனுதவிகளை மகளிர் குழுக்களுக்கு கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அபிதா ஹனிப், முன்னோடி வங்கி மேலாளர், கார்த்திகேயன், கிராமப்புற வேலைவாய்ப்பு பயிற்சித்துறை இயக்குனர் ராஜரத்தினம் மற்றும் அலுவலர்கள், மகளிர் சுய உதவிகுழுவினர் கலந்து கொண்டனர்.


Next Story