வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க கடனுதவி


வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க கடனுதவி
x

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படுகிறது.

பெரம்பலூர்

3 சதவீதம் வட்டி மானியம்

பெரம்பலூர் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற முதல் தலைமுறை தொழில் முனைவோர் தொழில் தொடங்கிட வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்த திட்டத்தின்கீழ் பயன்பெற பொது பிரிவினர் 21 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். பெண்கள் மற்றும் இதர பிரிவினருக்கு 21 முதல் 55 வயது வரை இருக்கலாம். விண்ணப்பதாரர்கள் தமிழகத்தில் குறைந்தது 3 ஆண்டுகள் வசிப்பவராக இருக்க வேண்டும்.

ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரையிலான உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில் திட்டங்களுக்கு 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ.75 லட்சம் வரை தமிழக அரசு மானியத்துடன் கூடிய வங்கி கடன் உதவி வழங்கப்படும். இதில் பட்டியல் மற்றும் பழங்குடியினர், மாற்றுத்திறனாளி தொழில் முனைவோருக்கு 10 சதவீதம் கூடுதல் முதலீட்டு மானியம் வழங்கப்படும். தவணை தவறாமல் கடனை திருப்பி செலுத்தும் தொழில் முனைவோருக்கு கூடுதல் சலுகையாக 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும்.

விண்ணப்பம்

இந்த திட்டத்தில் பயன்பெற ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் www.msmetamilnadu.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் இலவசமாக விண்ணப்பித்து பயன்பெறலாம். இணையதளத்தில் கல்வித்தகுதிக்கான சான்றிதழ், குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது வட்டாட்சியரால் வழங்கப்பட்ட இருப்பிட சான்று, விலைப்புள்ளி பட்டியல், திட்ட அறிக்கை மற்றும் சாதிச்சான்றிதழ் ஆகிய ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு 8925533977, 8925533978 என்ற தொலைபேசி எண்களிலோ அல்லது பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கலெக்டர் அலுவலகம் அருகில் என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தை நேரிலோ அணுகி பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story