சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் முகாம்


சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் முகாம்
x
தினத்தந்தி 8 Sept 2023 1:30 AM IST (Updated: 8 Sept 2023 1:31 AM IST)
t-max-icont-min-icon

சாலையோர வியாபாரிகளுக்கு சிறப்பு கடன் வழங்கும் முகாம் கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் நடைபெற் றது.

கோயம்புத்தூர்

கோவை


சாலையோர வியாபாரிகளுக்கு சிறப்பு கடன் வழங்கும் முகாம் கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் நடைபெற் றது. முகாமை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மேயர் கல்பனா ஆனந்தகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் வங்கி கடன் கேட்டு வியாபாரிகள் விண்ணப்பம் அளித்தனர்.

இதில் முதற்கட்டமாக ரூ.10 ஆயிரம், 2-ம் கட்டமாக ரூ.20 ஆயிரம், 3-ம் கட்டமாக ரூ.50 ஆயிரம் கடனுதவி வழங்கப்படு கிறது. முகாமில் ஆணையாளர் பிரதாப் கூறியதாவது:-


இந்த திட்டத்தின் கீழ் கடன் பெறும் வியாபாரிகள், கடனை திருப்பி செலுத்தும் போது பணமாக செலுத்தாமல் கியூஆர்.கோடு செயலியை பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் பணத்தை திருப்பி செலுத்தினால் அதற்கான கட்டணத்தொகை திரும்ப வழங்கப் படும். சாலையோர வியாபாரிகள் கடன் பெற தனியார் கணினி மையங்களை நாடாமல் மாநகராட்சியை அணுகி இலவசமாக விண்ணப்பிக்கலாம்.

கட்டணமின்றி பதிவு செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் மாநகராட்சி நிர்வாகம் செய்து உள்ளது. சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை வழங்கிட மாநகராட்சி அலுவலர்கள் தங்களது அடையாள அட்டை காண்பித்து வருவார்கள்.

அவர்களிடம் மட்டுமே உங்களது தகவல்களை தெரிவிக்க வேண்டும்.

தனியாரிடம் பணம் கொடுத்து அடையாள அட்டைகளை வாங்க வேண்டாம். சாலையோர வியாபாரிகளுக்கு போலியாக அடையாள அட்டை கொடுத்தவர்கள் மீது போலீசில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story